பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது நபர் இறந்ததைத் தொடர்ந்து, கேரளாவில் நிபா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வவ்வால்கள் மூலம் இந்த வகை வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ நோய் தொற்று ஏற்படும். […]