ஆந்திராவின் புகழ்பெற்ற ஸ்ரீசைலம் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 29 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சரஸ்சந்திரா என்ற பக்தர், லட்டுவில் இறந்த பூச்சி இருப்பதைக் காட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. லட்டுவில் பூச்சியைக் கண்ட சரஸ்சந்திரா, கோயில் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பதில் அளிக்காமல் […]