சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியது.
இது குறித்து தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.சேசுராஜா கூறியதாவது; பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுடன் இதுவரை …