கேரளாவின் கல்வி துறையில் மாற்றத்தைத் தூண்டும் வகையில் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய திரைப்படம் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுயாட்சி தேர்தலையும், சமூக அடையாள வேறுபாடுகளை நீக்கும் முயற்சியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், சினிமாவை தாண்டி கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அந்த படத்தில் ஒரு வகுப்பறை காட்சி மிகுந்த கவனத்தை ஈர்த்தது. அந்த வகுப்பில் மாணவர்கள் அரை வட்டமாக அமர்ந்திருக்க, […]