ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் குறித்து முக்கிய அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவர்களின் மேற்கு கூட்டாளிகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்த கடல் வழி மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி மூலம் வெளியிடப்பட்டது. கடந்த சில நாட்களாக உலகின் மிகப் பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலைமை தெளிவாக இல்லாமல் இருந்தது. […]

திங்கட்கிழமை, ஓமன் நாட்டு பகுதியில், வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் படகு ஒன்று மார்ஷல் தீவுகள் கொடி ஏந்திய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது மோதி தாக்கியதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஒரு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா–இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு […]