ஏசி மற்றும் எல்இடி விளக்குகள் பிஎல்ஐ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 15, 2025 முதல் 30 நாட்களுக்கு வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் இந்தியாவில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் எல்இடி விளக்குகளின் முக்கிய பாகங்களை உற்பத்தி செய்வதால் உருவாகும் வளர்ந்து வரும் சந்தை மற்றும் நம்பிக்கையின் விளைவாக, இந்தத் திட்டத்தின் கீழ் அதிக […]

மின்‌ உபகரணங்கள்‌ கொள்முதல்‌ செய்ய தாட்கோ மூலம்‌ மானியம் வழங்கப்படுகிறது. அதே எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம். ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ ஆவின்‌ நிறுவனத்தின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின்‌ நிறுவனத்திடம்‌ ஒப்பந்தம்‌ செய்யப்பட வேண்டும்‌. தொழில்‌ செய்ய தாட்கோ மூலம்‌ மின்‌ வாகனம்‌, உறைவிப்பான்‌, குளிர்விப்பன்‌ […]

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 – 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான […]

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் […]

1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் வேளாண் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மானியம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து […]

வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். சமூக நலத்துறையின் சார்பில் மகளிர் வாழ்வாதாரத்தை பொருளாதாரம் ரீதியாக மேம்படுத்த ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் […]

தமிழகத்தில் 30 சதவீத மானியத்துடன்,, உழவர் நல சேவை மையங்களை அமைக்கலாம் என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில், முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் 1,000 […]

பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறு நிறுவனங்களை முறைப்படுத்தும்‌ திட்டம்‌ 2021 முதல் 2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு. இத்திட்டத்தில்‌ மானியம்‌ மத்திய அரசின்‌ 60 சதவீதம்‌ மற்றும்‌ மாநில அரசின்‌ 40 சதவீதம்‌ நிதி பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்‌ ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள்‌ என்ற முறையிலும்‌ மற்றும்‌ அனைத்து உணவு சார்ந்த தொழில்களுக்கும்‌ (புதிய மற்றும்‌ விரிவாக்கம்‌) செயல்படுத்தப்படுகிறது. […]