தருமபுரி மாவட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி வனக்கோட்டத்தில் ஒகேனக்கல் நீர்பிடிப்புப் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்த வனப்பகுதிகளில் சந்தனம், தேக்கு, ஈட்டி, கருவேலம், வாகை, துறிஞ்சி மற்றும் இதர மர வகைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதேபோல அதிக அளவில் யானைகள், காட்டெருமைகள், புள்ளிமான்கள். மயில்கள், பன்றிகள் […]