தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21-ம் தேதி தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் […]