1990களில் தென்னிந்தியாவில் பல வெடிகுண்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதி அபுபக்கர் சித்திக், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது அலியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) பல மாதங்களாக மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இருவரும் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் […]