முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; பள்ளி, கல்லூரி மாணவ. மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மண்டல […]

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 17.07.2025 வரை, தமிழ்நாட்டில் 9,57,825 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 7,43,299 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசால் மொத்தம் 59,121 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் […]

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். நிதியாண்டு 2023-24 இல் இந்த எண்ணிக்கை 79.39 லட்சமாகவும், நிதியாண்டு 2022-23 இல் 75.79 லட்சமாகவும் இருந்தது.இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய […]

தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் மாநகராட்சியைப் பொறுத்தவரை 677, நகராட்சியில் 455 என மொத்தம் 1,132 இடங்களில் காலனி மற்றும் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அப்பெயரை நீக்கி, பூக்கள், மரங்கள், இயற்கை, […]

தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி உலக குருதி கொடையாளர் தினமாக […]