கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 188 பயணிகளுடன் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேற்று காலை 9 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்டுச்சென்ற 2 மணி நேரத்தில் நடுவானில் பறந்தபோது அதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து […]

சென்னையிலிருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து மதுரை செல்லக்கூடிய விமானம் விமான நிலையத்திலேயே தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனெனில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, அதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விமானத்தை உடனே தரையிறக்க முடியாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எதிர்பாராமல் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும். தற்போது, […]