திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. விழா நாளான நாளை (ஜூலை 7, 2025) பக்தர்கள் வெள்ளம் பெருகும் நிலையில், கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோவிலுக்கு முன்புள்ள கடற்கரையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை குழுவினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் படையினர் இணைந்து, […]