திருப்பதியில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வெளியிட்டுள்ள் அறிக்கையில் “ திருப்பதி கோயிலில் சில இளைஞர்கள் ரீல்களுக்காக குறும்புத்தனமான செயல்களைச் செய்வது போன்ற வீடியோக்களை உருவாக்குவது, திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கவனத்திற்கு வந்துள்ளது. அவர்கள் கோவிலின் வளாகத்தில் நடனங்கள், ஆட்சேபனைக்குரிய போஸ் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் வீடியோக்களை உருவாக்கி, அவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியிடுகின்றனர். […]