கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் […]
Tn Rain Update
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.. இந்த புயல் திருகோணமலைக்கு (இலங்கை) தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், […]
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் “ தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல […]
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு […]
இன்றும் நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (20-11-2025) காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் […]
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி […]
தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. கடந்த வாரம் மோன்தா புயல் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.. அதன்பின்னர் மழையின் அளவு படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மோன்தா புயலாக மாறியது.. சென்னைக்கு 520 கி.மீ வேகத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் கடந்த 6 மணி நேரமாக 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளது… அதன்படி மோன்தா புயல் தற்போது 18 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது.. இந்த புயல் நாளை காலை தீவிர […]
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது வலுவடையவில்லை.. மேலும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்துள்ளது.. இந்த […]
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் […]

