fbpx

டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து …

ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு …

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசில்‌ 7,500 பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணிக்கு உதவி தணிக்கை அலுவலர்‌, உதவி பிரிவு அலுவலர்‌, வருமானவரித்துறை ஆய்வாளர்‌, உதவியாளர்‌ மற்றும்‌ அஞ்சலக துறையில்‌ உதவியாளர்‌ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு பணியிடத்திற்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம்‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கு கல்வித்தகுதி பட்ட …

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு கம்ப்யூட்டர் மூலம் 20-ம் தேதி …

TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், …

குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”குரூப் 2 பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு 25-ம் தேதி காலை மற்றும் மாலை நேரங்களில் 20 மாவட்ட தேர்வு …

TNPSC எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்போது சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் …

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த நில அளவர்‌ மற்றும்‌ வரைவாளர்‌ ஆகிய பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும்‌ தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள்‌ 16.09.2022 அன்று சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நில அளவர்‌ , வரைவாளர்‌ …

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ Executive officer Grade III (Group VIIB) & Grade lV (Group Vll) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று மற்றும்‌ நாளை முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ இருவேளைகளிலும்‌ எழுதும்‌ விவர்ணப்பதாரர்கள்‌ கவனத்திற்கு. தருமபுரி மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ செயல்‌ அலுவலர்‌ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று முற்பகல்‌ …

தலைமைச் செயலகத்தில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியில் அடங்கிய உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளில் 161 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் மாதம் 18-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடத்தப்பட …