தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் தேர்வு நாளை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிறை அலுவலர் பதவிக்கான கொள்குறிவகைத்தேர்வு நாளை முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஜெயம் பொறியியல் கல்லூரியில் இணையவழி முறையில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 410 தேர்வர்கள் தேர்வு எழுதவிருக்கின்றனர். தேர்வு மையத்தில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. […]