இந்திய ரயில்வே பல ஆண்டுகளாக ரயில் பயணிகளிடையே நிலவி வந்த குழப்பத்திற்கு இறுதியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்று தெரியாமல், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நாட்கள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. டிசம்பர் 16 அன்று ரயில்வே வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி, இனிமேல் ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 10 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவுப் பட்டியல் (ரிசர்வேஷன் சார்ட்) தயாரிக்கப்படும். இந்த முடிவு லட்சக்கணக்கான பயணிகளுக்கு, […]