டிசம்பர் 3 முதல் 5 வரை விமான நிலையங்களில் சிக்கித் தவித்த இண்டிகோ விமான நிறுவன பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் பயணித்த எங்கள் வாடிக்கையாளர்களில் ஒரு பகுதியினர் சில விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்ததையும், அவர்களில் பலர் நெரிசல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதையும் இண்டிகோ வருத்தத்துடன் ஒப்புக்கொள்கிறது. […]

