தன்னை கொலை செய்ய முயன்றதாக ஈரான் பொறுப்பேற்றால், அந்த நாடு “முழுமையாக அழிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை குறிவைத்து நடைபெறும் எந்தவொரு கொலை முயற்சிக்கும் இந்த உத்தரவு நேரடியாக பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “எனக்கு மிகவும் உறுதியான உத்தரவு உள்ளது.. எதாவது நடந்தால், அவர்கள் இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்தே அழிக்கப்படுவார்கள்,” என்று கூறினார். […]

