fbpx

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாளை அப்பகுதி மக்கள் பாராட்டு விழா நடத்த உள்ளனர்.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் …

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்; மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் …

டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது.

மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், டங்ஸ்டன் ஆலைக்கான ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தி …

அரிட்டாப்பட்டி டஸ்ங்டன் சுரங்க ஏல உரிமையை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, …

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் இன்று மகிழ்ச்சியான செய்தி வரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய சுரங்கத்துறை அமைச்சரை சந்திக்கும் வகையில் அரிட்டாபட்டி விவசாயிகளை பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.…

மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகே போராட்டம் நிறுத்தப்படும் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என தமிழக அரசு …

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் தடையை மீறி மதுரை தலைமை தபால் நிலையத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட இடங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த சுரங்க அனுமதிக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. …

மத்திய சுரங்க அமைச்சகம் ஏலம்விட முடியும். ஆனால், சுரங்க குத்தகையை மாநில அரசு தான் வழங்க வேண்டும். நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என டங்ஸ்டன் ஏலம் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் …

மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி ஏலம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது .

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை மாவட்டம், மேலூர் – தெற்குத்தெரு – முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டனுக்கான புவியியல் குறிப்பாணையை (ஜி.எஸ்.ஐ) 2021 செப்டம்பர் 14 அன்று தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது. அந்த நேரத்தில் …

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் ஏன்? பிள்ளையை கிள்ளிவிட்டு,தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் …