கரூர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் அமைச்சர் அன்பில் மகேஷ் கரூர் விரைந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் […]

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், கரூர் மாவட்ட […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று இரவு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார். விஜய் வருகையை நோக்கி பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தின் போது கட்டுப்பாடுகள் இல்லாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. விழாவின் நடுவே, ஒரு பெண் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நிகழ்ச்சி முடிந்து விஜய் வெளியேறியதும்,கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். […]

விஜய்யின் தவெக 2026-ல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. வார இறுதி நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.. திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் கடந்த வாரம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே […]