அதிமுகவின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண பாடல், லோகோ வெளியீட்டு நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததால் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது.. கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பெற்ற வேதனைகள், துன்பங்கள், கொடுமைகள் அத்தனையும் மக்களிடம் பட்டியலிட்டு எடுத்து சொல்லி, திமுக ஆட்சியை […]

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மற்றும் பாஜக உடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை உறுதியாக […]

தவெக மாநில செயற்குழு கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு விஜய் சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மண்டல நிர்வாகிகள், செயலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தாயார் ஷோபாவும் இதில் கலந்து கொண்டார். செயற்குழு கூட்டம் […]

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான போராட்டத்தை தள்ளி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தவெகவுக்கு அறிவுறுத்தி உள்ளது. திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு இரண்டு […]

பூந்தமல்லியில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு சென்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தவெக தலைவருமான விஜயின் 51-வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் வெகு சிறப்பாக கொண்டாடினர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ரத்த தானம் வழங்குதல், சிறப்பு பிரார்த்தனைகளை செய்தல், மக்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல் உள்ளிட்ட […]

பட்டியலின மக்களின் சமூக உரிமை போன்ற விவகாரங்களில் திமுக அரசு கபட நாடகம் ஆடுவதாக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திமுக அரசை சமூகநீதி அரசு என ‘மூச்சுக்கு மூச்சு’ விளம்பரப்படுத்திக் கொள்ளும் விளம்பர மாடல் தி.மு.க அரசு, உண்மையில், ‘சமுக அநீதி’ அரசாகவே செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக, பட்டியலின […]

நடிகர் விஜய் முருகர் மாநாட்டில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டிருந்திருப்பார், அதனால்தான் வீட்டுக்கு வந்த ரசிகர்களை அவர் பார்க்கவில்லை என கோவை வைஷ்ணவி விமர்சித்துள்ளார். நடிகர் விஜயின் 51-வது பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் பார்ப்பதற்காக நீலாங்கரை இல்லத்திற்கு திரண்ட ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் முடிந்தனர். வீட்டுக்குள்ளேயே இருந்த விஜய், வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஒரு நிமிடமும் நேரில் சந்திக்கவில்லை என்பது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து பைக்கில் […]

கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணைவிகளை அணைத்து தகாத செயலில் விஜய் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் குழந்தைகள் நல குழுவிடம் புகாரளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் […]