ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 8) காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் தெற்கு காஷ்மீரில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. […]

