உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி தாலுகாவில் நேற்றிரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, பெருமளவு சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் இதில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தின் விளைவாக உள்ளூர் சந்தைகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோட்தீப் தாலுகாவின் தாராலி சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனரக குப்பைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது.. […]