fbpx

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் (நேர்காணல் இல்லாதது) மின்சார வாரிய உதவி பொறியாளர் பதவியில் 250 காலியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தற்பொழுது, ஒட்டுமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1,235 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக்கழக உதவி மேலாளர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 14 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், …

நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 651-லிருந்து 992 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

உதவி பொறியாளர் (சிவில்), வேளாண் அதிகாரி (விரிவாக்கம்), புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), மருந்து ஆய்வாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் …

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 2024ல் பல்வேறு பணிகளுக்கு 10,701 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14,353 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம், 2024ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 14,353 …

குரூப் 4 பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் குரூப் 4 காலிப்பணியிடங்களில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டது. இதனால் மொத்தம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 6,724 உயர்ந்துள்ளது.…

அரசு கல்வியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஆன்லைனில் (www.tngasa.in) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 26-ம் தேதி ஆகும்.

இதற்கிடையே, நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கான …