வேடசந்தூர் அருகே சுற்றுலா வேன் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பூசாரி கவுண்டன்பட்டியை சேர்ந்த 22 விவசாயிகள், ஆடி அமாவாசையை முன்னிட்டு கிடா வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள நாத்த்ராயன் கோயிலுக்குச் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். […]