வெற்றிமாறன் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதில் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியான முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் வரலாற்றுப் பின்னணியில் சில குளறுபடிகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக புலவர் களியபெருமாள், பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் போராட்டங்களை பின்னணியாக வைத்து விடுதலை உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், அதில் அவர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுவிட்டதாக பலவிதமான விமர்சனங்கள் வந்தன. […]