கொடுத்த கடனை திருப்பி கொடுக்காத காரணத்தால் ஒரு இளைஞரை கயிறில் கட்டி பைக்கில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் பகுதியில் நேற்று ஒரு இளைஞரின் கைகளில் கயிறு கட்டி அதை மோட்டார் வாகனம் மூலம் ஆறு கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றுள்ளனர். நேற்று மாலை நேரத்தில் நடந்த இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்த எந்த பொது மக்களுமே தடுத்து நிறுத்தவில்லை. […]