12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை […]
vote
முகவரி மாறி வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2002-04 காலகட்டத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2026 தொடக்கத்தில் தமிழகம், […]
பிகாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு கிடந்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது. பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகாரில் முதல் முறையாக 100% வாக்குச்சாவடிகளிலும் நேரடி ஒலிபரப்பு மூலம் வாக்குப்பதிவை உன்னிப்பாகக் கண்காணித்தனர். மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று […]
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ; இலங்கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் […]
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடத்தப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, […]
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இது […]
பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வாக்காளர் பட்டியலில் சரி பார்ப்பது தவறில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களை நீக்க வேண்டும். எந்த விசாரணையும் இன்றி சிலரை சேர்க்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வருகிறது. யார் பெயரை நீக்கினாலும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வேலைக்கு என […]
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம். நடைபெற உள்ளது. மத சார்பற்ற கூட்டணி சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் வருகிற 4ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர […]
தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்ய இருப்பதால், அந்தப் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026 ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. முறையான வாக்காளர் பட்டியல் […]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025 வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் மற்றும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பீகாரில், நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை) அன்று முதற்கட்டத் தேர்தலும், இரண்டாம் கட்டத் தேர்தல் 2025 நவம்பர் 11 (செவ்வாய்க்கிழமை) அன்றும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் 2025 […]

