தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், குழந்தைப் பருவம் என்பது விளையாடி மகிழ்ந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வளர வேண்டிய பருவம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். செல்போன் போன்ற சாதனங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளின் உலகமாக மாறிவிடக் கூடாது. சரியான வழிகாட்டுதலுடன், கட்டுப்பாட்டுடன் குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. குழந்தைகள் சிறு வயதிலேயே மின்னணு திரைகளுக்கு அறிமுகம் ஆகும்போது, அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் அபாயம் உள்ளது. […]