அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களைத் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ; அண்மையில் தண்ணீர் மாசுபாடு தொடர்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டவும் இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் …