இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கூட்டுறவு வங்கி மூழ்கியுள்ளது. இதனால், அடகு வைக்கப்பட்ட நகைகள், பணம், ஆவணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. […]