ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பாகர் இரண்டு வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. 10 மீ., ஏர் பிஸ்டல் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், சுருச்சி, பாலக் குலியா இடம் பெற்ற அணி பங்கேற்றது. மொத்தம் 1730 புள்ளி எடுத்து, வெண்கலம் வென்றது. […]