தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் மகளிருக்கான 6 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தங்கும் விடுதிகள் சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து பெறப்பட்ட 3 மகளிர் தங்கும் விடுதிகளும் சீரமைக்கப்பட்டு செயல்படுகின்றன. தற்போது மொத்தம் 19 விடுதிகள் […]