கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என போற்றப்படுகிறது. இதனை மகா சஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி […]

எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லையா? கடன் தொல்லை அதிகமாகிவிட்டதா? குடும்பத்தில் சூழ்ந்துள்ள வறுமையை அகற்ற நீங்கள் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், சில எளிய பரிகாரங்களையும் செய்ய வேண்டும். அதில் முக்கியம் மிளகு தீபம். அந்தவகையில் இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம். கடனில் மூழ்கிவிட்டால் நிம்மதியே போய்விடும்.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாக நகர்ந்து கொண்டிருக்கும், இதனால் நிம்மதியை இழந்து மன உளைச்சலும் பெருகிவிடும். […]

புதன்கிழமை விநாயகரை வழிபடுவதன் மூலம் பலன்களைப் பெறுவீர்கள். இந்த நாள் புதன் கிரகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது ஞானம், தொடர்பு மற்றும் வணிகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இது விநாயகர் தினம், லால் கிதாபின் படி, இது துர்கா தேவியின் நாள். பலவீனமான நினைவாற்றல் அல்லது நிலையற்ற மனம் கொண்டவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் சிறப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் விநாயகர் கோவிலுக்குச் சென்று வெல்லம் […]

ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரங்கள் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படுகிறது. சனிக்கிழமை வரும்போது, ​​அது சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபடுவது அனைத்து துன்பங்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது மற்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களிலிருந்து நல்ல பலன்களைத் தருகிறது. மேலும், இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது பாவங்களைப் போக்க உதவுகிறது மற்றும் சனியால் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்குகிறது. இந்த விரதம் […]

நவராத்திரி வழிபாட்டில் சந்திரகாண்டா அம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. நவராத்திரியின் மூன்றாம் நாளுக்கு உரிய துர்க்கை ரூபம் தமிழில் சந்திரகாந்தா என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் சந்திரகாண்டா என்று அழைக்கப்படுகிறது. மாதா சந்திரகாண்டா தேவியை வழிபடுவது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க சந்திரகாண்டாவை வணங்கலாம். யுத்தத்தில் வெற்றி தரும் கருணை வடிவாக அம்மா சந்திரகாண்டாவை போற்றுவர். சந்திரன் என்றால் மதி அல்லது பிறை. […]

ஷரதிய நவராத்திரியின் புனிதமான திருவிழா செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கியது. இன்று, செப்டம்பர் 23, துர்கா தேவியின் 2 ஆவது அவதாரமான பிரம்மச்சாரிணி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது நாள் நவராத்திரியின் இரண்டாவது நாளாகும். பிரம்மச்சாரிணி தவம் மற்றும் தியானத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறார். அவரை வழிபடுவது ஜாதகத்தில் உள்ள மங்கள தோஷத்தை நீக்கி மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். மத புராணத்தின் படி, பிரம்மச்சாரிணி தேவி, இமயமலை மன்னர் மற்றும் ராணி […]

ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் மாதங்களில் 4வது மாதமான ஆடி மாதத்தில் ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் ஆடி கிருத்திகை. முருகப் பெருமானுக்கு உகந்த நாளான ஆடி கிருத்திகை இந்தாண்டு 2 முறை வரும். பழநியில் ஜூலை 20 தேதி கொண்டாடப்பட்டது. திருத்தணி, வடபழநி ஆகிய முருகன் கோவில்களில் […]

ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி எப்போது? அந்த நாளில் மேற்கொள்ள வேண்டிய பைரவ விரத வழிபாட்டு முறை, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். ஆடி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்து பைரவரை வழிபட ஒரு சிறந்த நாளாகும். பைரவர் சிவபெருமானின் உக்கிரமான அம்சங்களில் ஒருவராவார். எனவே அஷ்டமி நாளில் கால பைரவரை இணைத்து வழிபடுவதால் பலவிதமான இன்னல்கள் மற்றும் […]

அம்மன் மற்றும் சிவனுக்கு உரிய ஆடி மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என சில நாட்கள் விஷேஷமானதாக பார்க்கப்படுகின்றன. அதில், ஆடி செவ்வாய் முக்கியமான நாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நாளில், சிவன், அம்மன் ஆகியோரை வழிபடுவது அதிக பலனை தரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் பெண்கள் விரதம் இருந்து வழிப்பட சிறந்த நாளாக திகழ்கிறது. […]

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி,பழமுதிச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது. கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம் மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை […]