நாம் அனைவருமே அஸ்வகந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அஸ்வகந்தாவை ‘இந்தியன் ஜின்செங்’ என்றும் அழைப்பார்கள். இது ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாகும். பொதுவாக அஸ்வகந்தா ஆண்மையை அதிகரிக்க, பாலியல் பிரச்சனைகளை போக்குவதில் சிறந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்று ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும் உடல் பருமனைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஒருவரது உடல் எடை அதிகமாக இருந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

அஸ்வகந்தா எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது? அஸ்வகந்தா உடலில் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யாமல், உடலில் பல வேலையை செய்கிறது. இதனால் இது உடல் எடையை வேகமாகவும், ஆரோக்கியமாகவும் குறைக்க உதவுகிறது. இப்போது அஸ்வகந்தா உடல் எடையைக் குறைக்க எப்படி உதவுகிறது மற்றும் அஸ்வகந்தாவை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் காண்போம்
மன அழுத்தத்தைக் குறைக்கும் உடல் பருமன் ஏற்படுவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று மன அழுத்தம். ஒருவர் அதிக மன அழுத்தம் அடையும் போது, ஜங்க் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழும். இந்த உணவுகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் உள்ளதால், அது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அஸ்வகந்தா மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவி புரிந்து, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.