கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டம், சிட்லக்கட்டா தாலுகா பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி என்பவர் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரின் கடைக்கு வந்த 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், சிறுமி வீட்டிற்குத் திரும்பியதும், அவரது உடலில் இருந்த காயங்களை கண்ட பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, கோபால ரெட்டியால் பாதிக்கப்பட்ட உண்மை தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கோபால ரெட்டியைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



