தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. இந்த நிலையில் அவர் பெரம்பூரில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. தொடர்ந்து பெரம்பூரில் விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடே நமக்கு பிடித்தது தான் என்றாலும் நமது பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கி உள்ளேன்.. உன்னை மனதார நேசிக்கும் மக்கள் இருக்கும் இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கு விஜய் என்று என் மனம் சொல்லியது.. அதனால் தான் பெரம்பூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினேன்.
தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்கு தீய சக்தி திமுக தான் காரணம்.. பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது.. பாட்டி வயதில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை எனில் எதற்கு ஆட்சி அதிகாரம்..? திமுக ஆட்சியில் யாருக்காவது பாதுகாப்பு இருக்கிறதா..?
டாஸ்மாக்கில் மட்டுமே இதுவரைக்கும் 1000 கோடிக்கு மேல் ஊழல், நகராட்சி துறையிலும் 1000 கோடிக்கு மேல் ஊழல்.. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத இந்த தீய சக்தி திமுக அரசை தூக்கி எறியலாமா?
பணத்தை கொடுத்து ஜெயித்துவிடலாம் என்று கனவு காண்பார்கள்.. எல்லா பணத்தையும் வாங்கிக் கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்க.. ஏப்ரல் 3-ம் தேதி காலையில் ரெடியாகி, வாக்காளர் அட்டையை எடுத்துக் கொண்டு விசில் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அழுத்துங்கள்.. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல்.. உங்களுக்கான தேர்தல்.. எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன்.. உங்க பிள்ளை விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.. தயவு செய்து விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள்.. இது விசில் புரட்சி தேர்தலாக இருக்க வேண்டும்.. வேறு வேறு வேட்பாளர்களை நிறுத்தினாலும் அவர்களும் இந்த விஜய்யும் வேறு வேறு இல்லை.. நம்பிக்கையுடன் இருங்க.. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்..
Read More : Breaking : ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், விஜய் வேட்புமனு தாக்கல்..! பரபரக்கும் தேர்தல் களம்..!



