தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் கலக்கி வரும் நடிகை தமன்னா திரையில் மட்டுமல்ல, தனது அழகிலும் ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அவரது சருமத்தின் பிரகாசம் பற்றி எப்போதும் பேச்சு எழுவது வழக்கமான விஷயம். ஆனால், அந்த பிரகாசத்திற்கு காரணம் என்னவென்று அவர் சமீபத்தில் வெளிப்படுத்திய தகவல் ரசிகர்களையும், நெட்டிசன்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் லல்லான்டாப்பிற்கு அளித்த பேட்டியில், தமன்னாவிடம் முகப்பருவுக்கு என்ன மருந்து என்று கேட்கப்பட்டது. அவரது பதில் தொகுப்பாளரையும் பார்வையாளர்களையும் திகைக்க வைத்தது. முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க அதிகாலை உமிழ்நீரைப் பயன்படுத்துவதாக அவர் வெளிப்படையாகச் சொன்னார்.
இது அறிவியல் பூர்வமானது. நான் ஒரு மருத்துவர் இல்லை, ஆனால் இது எனது தனிப்பட்ட ஹேக், இதற்குப் பின்னால் அறிவியல் இருப்பதாக நான் நம்புகிறேன். நீங்கள் காலையில் எழுந்திருக்கும்போது உங்கள் உடல் உங்கள் வாயில் போதுமான பாக்டீரியா எதிர்ப்பு கூறுகளை உருவாக்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
ஏற்கனவே இவர் 2021 ஆம் ஆண்டு முகப்பருக்களை குணமாக்க நீங்கள் உங்கள் உமிழ்நீரையே பயன்படுத்துங்கள் என்று கூறியிருந்தார். அப்போது அது மிகவும் வைரலானது. உங்களுக்கு முகப்பரு இருந்தால் உங்கள் சொந்த உமிழ்நீரை குறிப்பாக காலையில் எழும்போது இருக்க கூடிய உமிழ்நீரை எடுத்து முகப்பருவின் மீது வையுங்கள். இது முகப்பருவை உலர்த்தும் தன்மை கொண்டது. இதனால் முகப்பரு குறையும். இது கேட்க ஒரு மாதிரி இருக்கும். ஆனால் இது உங்களுக்கு வேலை செய்யும் என்று கூறினார்.
2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தமன்னாவின் மீண்டும் இந்த குறிப்பு பிரபலமாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரம் அவர் தொடர்ந்து இளம் பெண்களுக்கு முகப்பரு பிரச்சனை தீவிரமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. தமன்னாவின் கூற்றுக்கு ஆதாரமாக, Journal of Cosmetic Dermatology-இல் வெளியான ஒரு ஆய்வில், உமிழ்நீரில் முகப்பருவை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மையுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு சேர்மங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Read more: திருப்பத்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 15 பேர் படுகாயம்..!!