முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது.. தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்க்ள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது..
பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது..
திமுக அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.. ஆட்சி முடிவடைய உள்ளதால் இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.. அந்த வகையில் பிப்ரவரி 13 அல்லது பிப்ரவரி 14-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : “அவ்வளவு தொகுதிகள் தரமுடியாது..” தேமுதிகவிடம் ‘NO’ சொன்ன திமுக..! கூட்டணி பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?



