நடப்பாண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.193 கோடியில் டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஏழை, எளிய பின்னணியை கொண்ட மாணவர்கள் தடையின்றி கல்வி பயிலும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் வசதிக்காக 2001 – 2002 கல்வி ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவால் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதற்கு முன்பு பட்டியல், பழங்குடியின மாணவர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சாதி வேறுபாடின்றி சைக்கிள் வழங்க திட்டம் வகுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி செய்த போதிலும் மாணவர்களுக்கான இந்த திட்டம் கைவிடப்படாமல் சைக்கிள்களின் வண்ணங்கள் மற்றும் மாற்றப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. திமுக ஆட்சிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் பச்சை நிறத்திலும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
தற்போது நடப்பாண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.193 கோடியில் டெண்டர் கோரியுள்ளது. இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு படிக்கும் BC மாணவர்கள் 1,91,799 பேருக்கும், MBA மாணவர்கள் 1,82,267 பேருக்கும், SC/ST மாணவர்கள் 1,56,467 பேருக்கும் இதர பிரிவினர் 6,267 பேர் என மொத்தம் 5.36 லட்சம் பேருக்கு சைக்கிள் வழங்கப்படவுள்ளன. இந்த சைக்கிள்களில் தமிழ்நாடு முதலமைச்சரின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025-26 என்ற லோகோ இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: கவனம்…! வீட்டு கடன் வாங்க இனி இந்த ஆவணங்கள் கட்டாயம்…! அவசியம் தெரிஞ்சுக்கோங்க…!