தமிழ்நாட்டின் மாநில கல்விக் கொள்கையின் கீழ், 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது.. அதிமுக ஆட்சிக்காலத்தில் 2017-18 கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.. இது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மாற்றமாகும், இதன் விளைவாக மாணவர்களுக்கு 10, 11, 12 ஆம் வகுப்பு ஆகிய 3 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது..
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது.. அதன்படி, நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது… 10,12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் என கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டது… அதே போல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் கட்டாய தேர்ச்சி முறை தொடரும்.. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மாநில கல்விக் கொள்கையின் கீழ், 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை மட்டும் உள்ளடக்கிய சான்றிதழ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11-ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மார்ச் 2030 வரை தேர்வு நடத்த தேர்வு இயக்குனருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read More : “விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்ட பொய்.. கரூரில் நடந்தது சதி..” ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி..



