ரூ.1 லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!!

School Money 2025

பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் சமூக பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் வீரச் செயல்கள் புரிந்த இளம் பெண் குழந்தைகளுக்கு மாநில அளவிலான விருது வழங்கப்பட உள்ளது.


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, பெண் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்களை தடுத்தல், கல்விக்கு உதவுதல் போன்ற சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபட்டவர்களை அங்கீகரிக்கிறது.

விருதுக்கான தகுதிகள் :

விண்ணப்பதாரர் 2025 டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, 13 வயதிற்கு மேற்பட்டவராகவும், 18 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராகப் போராடுதல், அல்லது குழந்தைத் திருமணங்களை தடுத்தல் போன்ற வீர தீர செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஓவியங்கள், கவிதைகள், மற்றும் கட்டுரைகள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி..?

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குழந்தைக்கு, தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24ஆம் தேதி ரூ.1,00,000-க்கான காசோலை மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 29, 2025 ஆகும். தகுதியுடையவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான https://awards.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை, தேவையான ஆவணங்களுடன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :

விண்ணப்பதாரரின் சுயவிவரம் (Bio-data), சுயசரிதை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள். வீரச் செயல்கள் பற்றிய குறிப்புகள், அதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள் மற்றும் செய்தித் தாள்களில் வந்த செய்திகளின் நகல்கள். ஏற்கனவே தேசிய அல்லது உலகளாவிய விருதுகள் பெற்றிருந்தால், அதன் விவரங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை 04652-278404 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Read More : உங்கள் பணத்தை இனி ஈசியா இரட்டிப்பாக்கலாம்..!! வட்டியே இவ்வளவு கிடைக்குமா..? மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

"செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்.." முதல் ஆளாக ஆதரவளித்த ஓபிஎஸ்..

Fri Sep 5 , 2025
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்றும் கூறியிருந்தார்.. 10 நாட்களுக்குள் இபிஎஸ் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனில், இதே மனநிலையில் உள்ளவர்களை ஒன்றிணைக்க தாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவளிப்பதாக […]
ops sengottaiyan

You May Like