“ இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழ்நாடு மாறிவிட்டது.. ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை..” இபிஎஸ் பேட்டி..!

Stalin EPS 2025

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது..  தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த ஆண்டும் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.. அவர் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறுவது இது 4-வது ஆண்டாகும்..


இதை தொடர்ந்து தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையை விட்டு வெளியேறினர்.. சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என திட்டுமிட்டு செயல்படுகின்றனர்..

அமைச்சரவை தயாரித்து வழங்கிய உரையில் உள்ள தவறை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார்.. ஆளுநர் உரையில் முதலமைச்சர் தனது கருத்துகளையும் பதிவு செய்கிறார். தவறான புள்ளி விவரங்களை படிக்க முடியாது என்று தான் ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் குறித்து விமர்சனம் செய்வது முறையல்ல.. அதிமுக அதனை செய்தது இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி பயில்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

போக்சோ வழக்குகள் 55% அதிகரித்துள்ளது என்பதை ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். தவறான தகவல்கள் உள்ள உரையை ஆளுநர் எப்படி வாசிப்பார்? ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை.. தமிழ்நாட்டில் நடந்த உண்மைகளை மறைக்கும் தவறான புள்ளி விவரங்களை ஆளுநர் எப்படி வாசிப்பார்? தவறான செய்தியை வாசிக்க மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார்.. அது நியாயம் தானே.. தனது தவறை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது..

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆவணமாகவே உள்ளன; பெரும்பாலான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆளுநர் மீது தவறான பிம்பத்தை உருவாக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழ்நாடு மாறிவிட்டது.. தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் குறைந்துள்ளது. தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.” என்று கூறினார்..

Read More : சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? தமிழக அரசு மீது 13 குற்றச்சாட்டுகளை அடுக்கி ஆளுநர் விளக்கம்..!

RUPA

Next Post

கே.என்.நேருவுக்கு புதிய சிக்கல்.. நகராட்சி துறையில் ரூ.365.87 கோடி லஞ்சம்.. டிஜிபிக்கு ED 3-வது முறையாக கடிதம்..!

Tue Jan 20 , 2026
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது என்று அதில் கூறியிருந்தது.. இதுகுறித்து விளக்கம் அளித்த கே.என். […]
KN Nehru 2025

You May Like