#Flash : ஓரணியில் தமிழ்நாடு.. மக்களிடம் OTP பெற இடைக்கால தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி..

collage 1752899455 1

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால் மக்களிடம் இருந்து ஓடிபி பெற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..

ஓரணி தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை திமுக நடத்தி வருகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையின் போது, ஆதார் எண்ணை பெற்று ஓடிபி பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.. இது தனிமனித உரிமை மீறல் எனவும், சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரபட்டது.. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர்


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால் மக்களிடம் இருந்து ஓடிபி பெற இடைக்கால தடை வித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன? ஓடிபி விவரங்களை கேட்க வேண்டாமென காவல்துறையினர் கூறும் நிலையில், எதற்காக ஆதார் விவரங்களை கேட்கிறார்கள்.. ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து திட்டங்கள் இல்லை.. வாக்காளர்களின் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்..” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்..

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.. மேலும் இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்மனு தாரராகவும் நீதிமன்றம் தாமாக முன் வந்து சேர்த்துள்ளது.

RUPA

Next Post

சேலம் தர்மபுரி தான் டார்கெட்.. மாற்று கட்சியினரை கொத்தாக தூக்கிய திமுக..!! ஸ்டாலின் போடும் பலே கணக்கு

Mon Jul 21 , 2025
Salem Dharmapuri is the target.. DMK has picked up the alternative parties in droves..!!
MK Stalin dmk 5

You May Like