கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது வணக்கம் என்று கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் புட்டபர்த்தி விழாவுக்கு சென்றதால் 1 மணி நேரம் தாமதமானதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்..
மேலும் “ சிறுவயதில் தமிழ் கற்றுக் கொண்டிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு, நான் இங்கு மேடைக்கு வந்த போது பல விவசாயிகள் தங்களின் துண்டை காற்றில் சுழற்றிக் கொண்டிருந்தனர்.. பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் கேள்வி எழுப்பியது..
கோவை என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறனை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி.. கோவையின் இந்த புனிதமான மண்ணில் மருதமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தலை வணங்குகிறேன். இங்கிருக்கும் ஜவுளித்துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது.. கோவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் தற்போது துணை குடியரசு தலைவராக நம் அனைவருக்கும் வழிக்காட்டிக் கொண்டிருக்கிறார்..
இயற்கை விவசாயம் என்பது மிகவும் சிறப்பான ஒன்று.. தமிழ்நாட்டு அனைத்து விவசாயிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.. நான் இங்கு பல்வேறு அரங்குகளை பார்த்தேன்… ஒருவர் இயந்திர பொறியியல் வேலையை விட்டு விவசாயத்திற்கு வந்திருக்கிறார், ஒருவர் இஸ்ரோ வேலையை விட்டு விவசாயத்திற்கு வந்திருக்கிறார்.. இவர்கள் பலருக்கும் ஊக்கமளிக்கிறார்கள்.. இங்கு வராமல் இருந்திருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கும்..” என்று தெரிவித்தார்..
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் துறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. வேளான் ஏற்றுமதி இரட்டிப்பு வளர்ச்சியை எட்டி உள்ளது.. உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது.. இயற்கை விவசாயத்திற்கு உதவி செய்ய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்து விட்டுள்ளது..
இயற்கை விவசாயத்திற்கு நிறைய உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.. இயற்கை வேளாண்மை என்பது நமது பாரதத்தின் சுதேசி கருத்து, இதை யாரிடம் இருந்தும் நாம் பெறவில்லை.. அது நமது பாரம்பரியம். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இயற்கை விவசாயம் தேவையானது.. தமிழகத்தில் 35,000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது..
இயற்கை வேளாண்மையில் சிறு தானியங்கள் பயிரிடுவதையும் நாம் இணைக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கு தேனையும் திணை மாவையும் நாம் படைக்கிறோம்.. கேரளா, கர்நாடகவாவிலும் சிறு தானியங்கள் தான் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.. கேரளா, கர்நாடகத்தின் மலைப் பகுதிகளில் பல்லடுக்கு வேளாண்மையை பார்க்கலாம்.. விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக தென்னிந்தியா உள்ளது..
உலகின் மிகப் பழமையான அணைகள் தென்னிந்தியாவில் தான் உள்ளன. நீர் மேலாண்மையில் தமிழகம் வழிகாட்டியாக உள்ளது.. இயற்கை வேளாண்மையை பாடத்திட்டத்தில் இடம்பெற செய்ய வேண்டும்.
இயற்கை வேளாண்மைக்கான தலைமையும் தென்னிந்தியா தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.. இந்த மாநாடு தேசத்தின் இயற்கை வேளாண்மைக்கு ஒரு புதிய திசையை காட்டும்..” என்று தெரிவித்தார்..
Read More : பதாகை ஏந்தி நின்ற மாணவிகள்; கோவை விழாவில் பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்.. வீடியோ!



