பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.. விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் சொன்ன வார்த்தை..!

vijay arcot nawab

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அக்கட்சியின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.. இந்த விழாவில் கிறிஸ்தவ பாதிரியார்கள், ஆற்காடு நவாப் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.. அப்போது பேசிய ஆற்காடு நவாப் “ ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தின் சிறந்த உதாரணமாக தமிழ்நாடு விளங்குகிறது.. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது..


இங்கு மத வேறுபாடின்றி மனிதர்களாக அனைவரும் மதிக்கப்படுகின்றனர்.. இங்கு மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது.. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது.. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய  பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது.. நாம் இஸ்லாமியராக இருந்தாலும் எனது மகனுக்கு என ஜீசஸ் என பெயர் சூட்டினேன்.. இயேசுவை நம்பவில்லை என்றால் நான் இஸ்லாமியரே கிடையாது.. கிறிஸ்தவத்தை நம்புவதே இஸ்லாம்.. ” என்று விஜய் முன்னிலையில் அவர் பேசினார்..

திமுக தான் தங்கள் அரசியல் எதிரி என்று கூறியுள்ள தவெக தொடர்ந்து திமுக அரசை கடுமையாக சாடி வருகிறது.. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுக்காப்பு இல்லை, ஊழல் மலிந்து கிடக்கிறது, பொருளாதார வளர்ச்சி இல்லை என்று விஜய் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அவர் முன்னிலையில் ஆற்காடு நவாப் முகமது அலி பேசியுள்ளது விவாத பொருளாக மாறி உள்ளது..

RUPA

Next Post

தவளை பாக்டீரியாவால் புற்றுநோயை வெல்ல முடியுமா? ஜப்பானிய ஆராய்ச்சியில் வியக்க வைக்கும் தகவல்..!

Mon Dec 22 , 2025
புற்றுநோய் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஒரு மிக முக்கியமான முன்னேற்றத்தை கண்டறிந்துள்ளனர். இது வருங்காலங்களில் மருத்துவ உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது. ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தவளைகள் மற்றும் பல்லிகளின் குடலில் வாழும் ஒரு சிறப்பு வகை பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா, மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோயை, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயை எதிர்க்கும் அபார திறன் கொண்டதாக இருக்கிறது. அறிவியல் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் பல வேகமான வளர்ச்சிகளை கண்டிருந்தாலும், […]
frog cancer

You May Like