தவெக தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பின் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. இந்த சந்திப்பு நடந்த 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் விஜய் இன்று திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜய் தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் சீலநாயக்கன்பட்டி திடலுக்கு சென்றார்.. அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
அப்போது பேசிய அவர் “ நம்மை ஏளனமாக பார்க்கும் நேரத்தில் நம்மை யார் என்று காட்ட வேண்டும் என்று நிரூபிக்க வேண்டிய சூழல் வரும்.. எதை வைத்து நம்மை கிண்டல் செய்கிறார்களோ, அதையே பாசிட்டிவாக மாற்றும் போது பவர் உருவாகும்.. ஏ விஜய், பனையூரை விட்டு வெளியே வா? என்று சொல்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என்று தெரியுமா?
என்னை கிண்டலும், கேலியுமாக பேசுபவர்களுக்கு நான் சொல்கிறேன்.. தமிழ்நாடு தான் என் வீடு.. என் வீட்டில் மொத்தம் 8 கோடி மக்கள் இருக்கின்றனர்.. இந்த மக்களுக்கு இனி எல்லாமுமாக கூட நிற்கப் போவது இனி இந்த விஜய் மட்டும் தான்.. உங்க விஜய், உங்ககிட்ட ஓட்டு கேட்க வரவில்லை.. உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறேன்..
இந்த விஜய் என்ன தப்பு செய்தான். தன்னை நேசித்த மக்களுக்கு அரசியலுக்கு வந்தான் அது ஒரு தப்பா? மற்ற கட்சிகளுக்கு மாநாடு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுப்பார்கள்? ஆனால் எனக்கு கொடுக்க மாட்டாங்க.. கொடுக்கவும் விட மாட்டாங்க. இது என்னங்க நியாயம்.. இந்த விஜய் உண்மையானவன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.. உங்களிடம் வந்து நீதி கேட்காமல் வேறு யாரிடம் நான் நீதி கேட்பேன்..
செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க.. பணத்தை கொடுத்து ஏமாற்றினால் ஏமாறுவீர்களா?” என்று தெரிவித்தார்..



