“ வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம்.. தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை..” தவெகவை மறைமுகமாக சாடிய உதயநிதி..!

vijay udhayanidhi 1

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வேலை தீவிரம் காட்டி வருகிறது.. அதன்படி திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு என தொடர்ச்சியாக பல மாநாடுகளை நடத்தி வருகிறது.


அந்த வகையில் இன்று விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்…

இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி “ திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.. இளைஞரணி மாநாடா? திமுகவின் வெற்றி மாநாடா என்று தெரியாத அளவுக்கு தொண்டர்கள் உற்சாகமாக திரண்டுள்ளனர்.. கழகப் பணி, மக்கள் பணி என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருப்பது. நமது இளைஞரணி உள்ளது.” என்று தெரிவித்தார்..

அப்போது வெற்றுக் கூச்சல் விஜய்யின் தவெகவை மறைமுகமாக சாடி உதயநிதி பேசி உள்ளார்.. மேலும் “இளைஞரணியின் பலமே நிர்வாக ரீதியான கட்டமைப்பு, கட்டுப்பாடு தான் பலமே.. ஆனால் எந்த அமைப்பு பலமும் இல்லாமல், எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல், கொள்கை என்றால் என்ன, லட்சியம் என்றால் என்னவென்றே தெரியாத வெற்றுக்கூச்சம் போடும் ஒரு கூட்டம் இன்று தமிழ்நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது..

அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் கிடையாது.. இன்னும் சொல்லப் போனால் அவர்களால் அவர்களுக்கே எந்த பயனும் கிடையாது.. இதை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.. திமுகவின் 75.. இன்றும் அதே வீரத்துடனும், இளமையுடனும் போரக்களத்தில் இருக்கிறது திமுக..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

“அரசியல் அறிவே இல்லாத சில அட்டைகள் உளறினாலும்...” இபிஎஸ், விஜய்யை விமர்சித்த உதயநிதி..!

Sat Feb 7 , 2026
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி “ தேர்தல் வந்தால் தமிழ்நாட்டின் ஞாபகம் பிரதமர் மோடிக்கு வந்துவிடும்.. அதனால் தான் இங்கு அதிகமாக வருகிறார்.. தேர்தல் திருவிழாவை […]
udhayanidhi

You May Like