” தமிழ் பிச்சை எடுக்க உதவாது..” கமல் பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் அலுவலகம் மறுப்பு..!

Kamal Haasan Nirmala 1 1

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் நேற்று கன்னி உரையாற்றினார்.. அப்போது அவர் கூறிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.. மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்ற பின்னர், பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் முதல் முறையாக பேசினார்.. அப்போது அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ் மொழியை இழிவுப்படுத்தியதாக கூறினார்..


இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “ பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள்.. நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாக கற்பூர பத்தி தான்.. அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.. அதன்பிறகு தான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது.

பிச்சை குவளை பெரும்  உண்டியலானது.. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழாஇ, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள்.. ஓரளவு உண்மை தன.. தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது.. திருடவும் உதவாது..” கடுமையாக விமர்சித்தார்.. கமல்ஹாசனின் இந்த உரை மாநிலங்களவையில் கவனம் ஈர்த்ததுடன், அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் கமல்ஹாசனின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறான தகவல் என விளக்கம் அளித்துள்ளது.. அதில் “ இன்று மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகத் திரு. கமல்ஹாசன் ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார். அதேபோல், நியூஸ் தமிழ் செய்தி ஊடகமும் எந்தவொரு அடிப்படைச் சரிபார்ப்பும் இன்றி, அமைச்சரின் பெயரில் தவறான ஒரு கருத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளது.

கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர் அவர்கள் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதற்காகவும், கௌரவத்திற்குரிய மத்திய அமைச்சரின் பேச்சைத் திரித்துக் கூறியதற்காகவும் அந்தச் செய்தி நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கவனம்..! தமிழ்நாட்டில் வேகமாக அதிகரிக்கும் புற்றுநோய்..! சென்னையில் தான் மிக அதிகம்..! அதிர வைக்கும் தகவல்..!

RUPA

Next Post

இந்த பொருட்களை தவறுதலாகக்கூட ஃபிரிட்ஜின் மேல் வைக்காதீர்கள்.. நீங்கள் ஆபத்தை அழைக்கிறீர்கள் என்று அர்த்தம்..!

Thu Feb 5 , 2026
உங்கள் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் மீது எதையாவது வைப்பீர்களா? அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது. சில வகையான பொருட்களை குளிர்சாதனப் பெட்டியின் மீது வைக்கவே கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை என்னென்ன, ஏன் அவற்றை வைக்கக்கூடாது என்பதைப் பார்ப்போம். பதக்கங்கள் மற்றும் கோப்பைகள்: பலர் தங்கள் பதக்கங்களையும் கோப்பைகளையும் அனைவருக்கும் காண்பிக்கும் நோக்கத்தில் ஃப்ரிட்ஜ் மீது வைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், இதுபோன்ற உலோகப் பொருட்கள் […]
fridge 2

You May Like